Yuganthini / 2017 ஜூன் 12 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகேகொடை மற்றும் விஜேராம பிரதேசங்களில், முஸ்லிம்களுக்கு சொந்தமான நான்கு வர்த்த நிலையங்களுக்கு தீ வைத்த சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், 2014ஆம் ஆண்டு முதல் பொதுபல சேனா அமைப்புடன் இணைந்து செயற்பட்ட நபராவார்” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
32 வயதான குறித்த சந்தேகநபர், மேற்படி வர்த்தக நிலையங்களுக்கு தீ மூட்டி சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவர் என்று, தகவல் கிடைத்துள்ளது.
“கடந்த ஒரு மாதத்துக்குள் மட்டும், முஸ்லிம் பள்ளிவாசல்கள் இரண்டு மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் இரண்டு ஆகியனவற்றுக்கு தீ மூட்டப்பட்டுள்ளன.
நுகேகொட விஜயராம பிரதேசத்தில், மேற்கொள்ளப்பட்ட தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், மஹரகம பிரதேசத்தில்வைத்து கைதுசெய்யப்பட்டார்.
அவர், தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார். அவர்,மேற்படி நான்கு சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்டவராவார்.
அவர், கலகொட அத்தே ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக, பொரளையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்துடன் நேரடியாக தொடர்பு பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1 hours ago
4 hours ago
8 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago
17 Jan 2026