பாலித ஆரியவன்ச / 2017 ஜூன் 09 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முச்சக்கரவண்டிகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி, வியானா கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாதில், பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.
இதேவேளை, பிள்ளைகள் இருவர் காணாமல் போயுள்ளனர். பாதிக்கப்பட்ட நான்கு போர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம், பதுளை-மஹியங்கனை வியானா கால்வாய் வீதியில், 7 மற்றும் 8ஆம் கிலோமீற்றருக்கு இடையில், நேற்றிரவு 10:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டிகள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதில், ஒரு வண்டி, வியானா கால்வாய்க்குள் விழுந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 21 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.
அந்தப் பெண்ணின் 7 வயது மகனும், 2 வயதான மகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போயுள்ளனர் என்று மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
வியானா கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளான, முச்சக்கரவண்டியில் பயணித்த ஏனைய மூவரும் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளன.
சம்பவத்தில் திசாநாயக்க மல்காந்தி (வயது 21) பலியாகியுள்ளார். அவருடை மகனான கவிஷ்க காயன் (வயது 7) மற்றும் ரஷ்மி தீபிகா (வயது 2) ஆகியோரே காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மஹிங்கனையில், பொசன் போயாவுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்று இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய முச்சக்கரவண்டி, வீதியில் புரண்டு கிடந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் புரண்டிருந்த முச்சக்கரவண்டியின் சாரதி, மதுபோதையில் இருந்ததாகவும், முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார், அந்த சாரதியை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
20 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
4 hours ago