2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மீனவர் விவகாரம்: மோடிக்கு ஜெயா கடிதம்

George   / 2016 ஜூலை 08 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருவதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்குக் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், 'இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 73 மீனவர்களையும், தமிழக மீனவர்களின் 101 விசைப் படகுகளையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்

இலங்கை கடற்படையினரின் தொடரும் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது' என்றும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .