2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர்

George   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் சரத் குமார குணரத்ன நீர்கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை(28) ஆஜராகியுள்ளார்.

தேர்தல் காலத்தில் பொலிஸ் அதிகாரிக்கு வாய்மூல அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் சரத் குமார குணரத்னவிடம் வாய்மூல அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றின் முன்னால் ஆஜர் செய்யுமாறு உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவினை நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவுக்கு அமைவாக முன்னாள் அமைச்சர் சரத் குமார குணரத்ன நீர்கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை(28) ஆஜராகியுள்ளார்.

இதனையடுத்து, செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி அவரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .