2021 ஜனவரி 20, புதன்கிழமை

மிஹிரி மோதர ஓயாவில் கழிவு கொட்டிய அறுவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிஹிரி மோதர ஓயாவில் கழிவுகளைக் கொட்டியதாகக் கூறப்படும் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம், இன்று செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தது.

கடற்படை பொலிஸ் பிரிவின் மிரிஸ்ஸ கடற்படை பொலிஸ் பிரிவு அதிகாரிகள் குழு, நேற்றுத் திங்கட்கிழமை (18) முற்பகல் 10.30 மணிக்கு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை, எதிர்வரும் வியாழக்கிழமை (21) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .