2021 ஜனவரி 16, சனிக்கிழமை

யட்டியந்தோட்டை சம்பவம் ‘தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் அல்ல’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேபல்ல தோட்டத்தில், நேற்று (18) நடைபெற்ற தாக்குதல் சம்பவமானது,  தனிநபர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்டுள்ளதென்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மதுபோதையில் இருந்த குறித்த இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இது தொடர்பில் பொலிஸ் அவசரப் பிரிவின் 119 என்ற இலக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, யட்டியந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தச் சம்பவத்தை சில சமூக வலைத்தளங்கள் தவறாக திரிபுபடுத்தி வெளியிடுவதாகவும், இது தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் இல்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறவுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .