2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தில் கைவிடப்பட்ட விவசாய வாகனங்களை கையளிக்க நடவடிக்கை

Super User   / 2010 ஜூன் 16 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொதுமக்களினால் கைவிடப்பட்ட விவசாயத்திற்குரிய வாகனங்களை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த வாகனங்களை பொது இடத்தில் வைத்து அங்கிருந்தே பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக வன்னி மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கையானது எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்  சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களினால் பெருமளவிலான விவசாயத்திற்குரிய வாகனங்கள் கைவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், மேற்படி விவசாயத்திற்குரிய வாகனங்களை உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் மேற்படி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இது தவிர, இவ்வாறு முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களினால்  கைவிடப்பட ஏனைய வாகனங்களையும் உரியவர்களிடம் கையளிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடியதாகவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--