Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி வேகம் போதாமல் இருப்பதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்காலத்தில் இன்னும் பல துறைகளுக்கு உதவி செய்ய, தமிழ்நாட்டு அரசாங்கம் முன்வரவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 50,000 நூல்களை யாழ்ப்பாணம் நூலகத்துக்குக் கையளிக்கும் நிகழ்வும், தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் காசோலை கையிக்கும் நிகழ்வும், இன்று (18) யாழ்ப்பாணம் நூலகக் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், எல்லோரும் கூறுவது பொல், யாழ்ப்பாணம் மாவட்டம் கல்வியில் பின்தங்கிவிடவில்லையெனவும் ஏனைய மாகாணங்கள் கல்வியில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதெனவும் தெரிவித்தார்.
ஆனால், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி வேகம் போதாமல் இருப்பதாகக் கவலை வௌியிட்ட இராஜாங்க அமைச்சர்,
எனவே, அதன் வேகத்தை அதிகரித்தால், ஏனைய மாவட்டங்களை போல, யாழ்ப்பாணம் மாவட்டமும் கல்வியில் வேகமான வளர்ச்சியைப் பெற முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, மத்திய அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை பேணி வருகின்ற நிலையில், தமிழ்நாட்டு கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் இந்த விஜயம், இன்னும் ஒரு பங்களிப்பை செய்துள்ளதாக தான் கருதுவதாக, அவர் மேலும் கூறினார்.
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
37 minute ago