2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2010 ஜூலை 06 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின்  யாழ். தென்மராட்சி, நல்லூர், கோப்பாய் பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான நடமாடும் சேவையொன்று இடம்பெற்றது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில், யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரான நெவில் பத்மதேவா தலைமையில் கடந்த சனியன்று இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வட பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி அமரகோன், வட பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி டி சில்வா, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ், உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த நிகழ்வின் போது, மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல், இரத்தப் பரிசோதனை, மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்குதல், தேசிய அடையாள அட்டை முறைப்பாடுகள், பிறப்புச் சான்றிதழ் உட்பட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்படி நடமாடும் சேவையில், சுமார் 5ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--