2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய இருவர் விளக்கமறியலில்

Super User   / 2010 மே 06 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் துஷ்பிரயோகச் சம்பவமொன்றுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட  யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இரு குடும்பஸ்தர்களையும் விளக்கமறியல் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் எஸ்.அரியரட்னம் உத்தரவிட்டார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே, அவர் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

மன்னாரில் கல்வி பயின்றுகொண்டிருந்த புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த யுவதி ஒருவரை அவரது சகோதரரியின் கணவரான சந்தேநபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், இவரது குற்றச்செயலுக்கு துணையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மற்றைய குடும்பஸ்தர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--