2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

யாழ். அரச அதிபர் நியமனத்தில் குழப்பம்

Super User   / 2010 ஜூலை 02 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் புதிய அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பில் குழப்பநிலை நிலவுகிறது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதாகவும்,  இதனையடுத்து, யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக பணியாற்றிய திருமதி இமெல்டா சுகுமார் நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபராக கடமையாற்றிய நாகலிங்கம் வேதநாயகம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக   நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

எனினும், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் நேற்றும் யாழ் செயலகத்தில் தனது கடமைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரச அதிபர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்களுக்கு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--