2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

யாழ். பயணியின் தொலைந்த பணம் மீட்பு

Kamal   / 2020 ஜனவரி 11 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் நோக்கில் அமர்ந்திருந்த பயணியொருவர் தனது கைப் பையை ரயில் நிலையதில் விட்டுச் சென்றுள்ளார்.

ரயிலில் பயணித்துகொண்டிருந்த போது சிறிது நேரத்தின் பின்னர் தனது பையை விட்டுச் சென்றதாக அவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அறிவித்துள்ளார். 

அதனையடுத்து  கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் அவர் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து அவருடையை கைப் பையை மீட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அதனை அநுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து ​அவரிடம் கையளித்துள்ளனர். 

அந்த பையில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்துடன் மோட்டார் சைக்கிளொன்றை கொள்வனது செய்வதற்கான ஆவணங்களும் இருந்தாக கூறப்படுகிறது. 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .