2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

யாழ். மாநகரசபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடருமா?

Super User   / 2010 மே 11 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாநகரசபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருப்பதால்,  மாநகரசபை ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டியிருந்த அத்தியவசிய நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாக யாழ்.மாநகரசபை  மேயர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழ்மிரர் இணையதளம் மாநகரசபை  மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவுடன் சற்று முன்னர் தொடர்புகொண்டு வினவியபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

மேற்படி பணிப்பகிஷ்கரிப்பு  காரணமாக யாழ் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் யாழ். மாநகரசபை மேயர் சுட்டிக்காட்டினார். 

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், மேற்படி பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில்  கேள்விப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்த யாழ். மாநகரசபைக்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், உடனடியாக பேராட்டத்தை கைவிடுமாறும் யாழ். மாநகரசபை ஊழியர்களிடம் டக்ளஸ் தேவானந்த கோரியதாகவும்  அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில்  சட்டரீதியான முறையில் தாம் நடவடிக்கை எடுக்கவிருப்பதாக டக்ளஸ் தேவானந்தா கூறியதற்கமைய, மேற்படி பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டிருப்பதாகவும்  மேயர் யோகேஸ்வரி குறிப்பிட்டார்.

இதனையடுத்து, யாழ். மாநகரசபை மேயர் அலுவலகத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில்  அமைச்சர் ஈடுபட்டிருந்ததுடன், இதன்போது பிரதி மேயர் மிக விரைவில் விடுவிக்கப்படாதவிடத்து பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என்று ஊழியர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ். மாநகரசபை பிரதி மேயர் இளங்கோ (றீகன்) கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து மாநகரசபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று நண்பகல் கைவிடப்பட்டுள்ளது

சாவகச்சேரி நீதவானுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலேயே யாழ் மாநகர சபையின் பிரதி மேயர்  கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ் பிரதி மேயர் இளங்கோ றீகனை எதிர்வரும் 24ஆம் திகதி வரை யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.(R.A)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .