Yuganthini / 2017 ஜூலை 20 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஸ் மதுசங்க
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் கல்வி பயின்றுவரும் அனைத்து மாணவர்களும், இன்றைய தினம் (20) வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தினால், குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை எதிர்த்தும், அவர்களுக்கான தடைய நீக்குமாறு வலியுறுத்தியுமே, மேற்படி வகுப்புப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளுக்கான இணைந்துகொள்ள வந்த புதிய மாணவர்கள் மீது பகடிவதை மேற்கொண்டதுடன் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்கள், வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, இணக்கப்பாடு காணப்பட்ட போதிலும், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையை அடுத்து, உபவேந்தர் ரத்னம் விக்னேஸ்வரனால், கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதியன்று, 8 மாணவர்களுக்கான வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.
இந்த வகுப்புத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜூன் 28ஆம் திகதி முதல், யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டில் கல்விகற்ற மாணவர்கள், வகுப்புப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையிலேயே இன்றைய தினம், விஞ்ஞான பீடத்தின் ஒன்று, இரண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் (930பேர்), இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வகுப்புத் தடைக்கு இலக்காகியுள்ள மாணவர்களை, மீண்டும் கல்வி நடவடிக்கைகளில் அனுமதிக்குமாறு வலியுறுத்தியே, அவர்கள் இந்தப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025