2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் வருகை

Editorial   / 2020 ஜனவரி 14 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் வருகை தந்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.

பொருளாதாரம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா, விஞ்ஞான தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கலந்துரையாடல்கள் நிறைவுபெற்ற பின்னர் ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் மற்றும் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--