2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் சார்பில் புதிய மனு தாக்கல்

George   / 2016 ஜூலை 17 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் சார்பில் இந்திய உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு தடை கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

அதன்படி, நாளை திங்கட்கிழமை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பிரபுல்ல சி.பந்த், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோர் தரப்பில்  கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி கோரி, புதிதாக இடைக்கால மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு டிசெம்பர் 2ஆம் திகதி அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு கடந்த மார்ச் 2ஆம் திகதி கைதிகளின் விடுதலைக்கு அனுமதி மற்றும் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி உள்ளது.

2014ஆம் ஆண்டு டிசெம்பர் 18ஆம் திகதி தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய முந்தைய கடிதத்தின் அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் விசாரணை, கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி  தமிழக அரசு அனுப்பியுள்ள கடிதத்தினால் முடிவுக்கு வருகிறது. 

எனவே, தமிழக அரசின் மேற்கண்ட கடிதத்தை (மார்ச் 2ஆம் திகதி எழுதிய கடிதம்) கூடுதல் ஆவணமாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .