2021 ஜனவரி 27, புதன்கிழமை

ராமதாஸின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்

George   / 2016 ஜூலை 13 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம் நாட்டின் தமிழ் கலைத்துறைக்கு மாபெரும் சேவையாற்றிய படைப்பாளியாகிய எஸ்.ராமதாஸின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வானொலி நாடகத்துறையூடாக தன்னுடைய கலைப்பணியை ஆரம்பித்த இவர் தமிழ், சிங்கள திரைப்படங்களில் நடித்துள்ளதை நினைவு கூறுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மக்கள் மனதில் காலம்காலமாக நிலைத்து நிற்கும் ஒரு கலைஞராகவே எஸ்.ராம்தாஸை தான் இனங்காணுவதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அவரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், கலைத்துறையினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .