2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

“வெசாக் போயா விடுமுறை திகதியை அரசாங்கம் தீர்மானிப்பது இல்லை”

Yuganthini   / 2017 ஜூலை 24 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் போயா விடுமுறை திகதியை அரசாங்கம் தீர்மானிப்பது இல்லை அதை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சே தீர்மானிக்கும் என, அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்

இந்த வெசாக் போயா விடுமுறை திகதியானது மதத் தலைவர்கள் அடங்கிய குழுவினால் தீர்மானிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

கூட்டு எதிரணியினரால் இவ்விடயம் தொடர்பில் கேள்வி கேட்கப்பட்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மேலும் அடுத்த வருடத்துக்கான போயா தினமானது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு காணப்படுகின்றது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இவ்விடயம் தொடர்பில் வர்த்தமானியில் அறிவித்தல் விடுத்துள்ளது.

பொதுவாக போயா தினமானது ஏப்ரல் மாதத்திலே வரும் என, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .