2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

விசேட மேல் நீதிமன்றில் முதலாவது வழக்கு விசாரணை

Editorial   / 2018 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை, துரிதமாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதிகள் மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றில், முதலாவது வழக்கு இன்று (24), விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லிற்றோ காஸ் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும், 500 மில்லியன் ரூபாய் மோசடி குறித்த வழக்கே, இன்று முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இருந்த, ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .