George / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு ரயில் மார்க்கத்தை இடைமறித்து ரயில் கடவை ஊழியர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர்.
அநுராதபுரம் - மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயில் பாதையில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக வடக்குக்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மன்னாரிலிருந்து கொழும்புக்கு பயணித்த ரயில்கள், மதவாச்சி ரயில் நிலையத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்து இவர்கள் ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, யாழிலிருந்து கொழும்பு மற்றும் கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணிக்கும் ரயில்கள் புறப்படும் நேரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
5 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
03 Nov 2025