Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோதத் தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்
வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவான மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் அழிக்கப்படுவதால் இவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன.
இதனையடுத்து கடற்தொழில் அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினர்களும் அந்த மீனவர்களை வெளியேற்றுவதாக கூறியிருந்தபோதிலும் அங்கு தொடர்ந்தும் அவர்கள் தங்கியிருந்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு வடமராட்சி கிழக்கின் தாளையடிப் பகுதியில் தங்கியிருந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற எட்டு மீனவர்கள் வடமராட்சி கடறபரப்பினுள் நுழைந்து தொழிலில் ஈடுபட்டபோது வடமராட்சி மீனவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்குன்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது
இதனையடுத்து அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸார், தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை கைது செய்து தாம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல முற்பட்டபோதும் அதற்கு அப்பகுதி மீனவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சட்ட விரோதமான தொழில்கள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் இந்த விடயத்தில் தமக்கு சாதகமான முடிவவை இதற்கான அமைச்சர் உள்ளிட்ட அரசியல் தரப்பினர்கள் தெரியப்படுத்தும் வேண்டுமென்றும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மீனவர்களை விடுவிக்க முடியாதென்றும் கூறுகின்றனர்.
45 minute ago
57 minute ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
57 minute ago
7 hours ago
19 Sep 2025