2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

வட சிறுவர்களின் கல்விக்கு முன்னுரிமை- ஜே.வி.பி வேண்டுகோள்

Super User   / 2010 ஜூன் 16 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட பகுதியில் சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

இன்று யாழ் நகரில் மக்கள் விடுதலை முன்னணி ஏற்படு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர் பெற்றேரை இழந்து  200 மாணவர்கள் யாழ். சென் ஜோன் கல்லூரியில் கல்வி பயின்று  வருகின்றனர்.

இது போன்ற இன்னும் பல சிறுவர்கள் பாடசாலை செல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு தேவையான கல்வியை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று நாட்களாக மக்கள் விடுதலை முன்னணியின் தூதுக்குழுவினர் வட பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு திரும்பினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--