2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

விண்ணப்ப முடிவுத் திகதி நீட்டிப்பு

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மாணவர்களுக்கான பாகிஸ்தான் முன்னணி பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கான 'அல்லாமா இக்பால்'  புலமைப்பரிசில்  விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதியை,  பாகிஸ்தான் உயர்க் கல்வி ஆணையம் மார்ச் 13 ஆம் திகதி வரை நீட்டித்துள்ளது.

இந்தப் புலமைப்பரிசில், பாகிஸ்தான்-இலங்கை உயர்க்கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.  இலங்கை மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், அடிப்படை மற்றும் இயற்கை விஞ்ஞானம், சமூக மற்றும் முகாமைத்துவ விஞ்ஞானம் போன்ற பல்வேறு கல்வித் துறைகளில்,   பாகிஸ்தானின் முன்னணி பல்கலைக்கழகங்களில், முழு  நிதியுதவி அளிக்கப்பட்ட  புலமைப்பரிசில்களை  இத்திட்டம் வழங்குகிறது.

மேலதிக தகவல்களை, http://www.pakistanhc.lk/wp-content/uploads/2020/02/ADVERTISEMENT.pdf. என்ற பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் காரியாலத்தின்  இணையத்தில்   பார்வையிடலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X