2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

வைத்தியர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பு

Yuganthini   / 2017 ஜூலை 25 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (25) காலை 8 மணியிலிருந்து தனது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினை நாளை மு.ப 8 மணிவரை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, அச்சங்கத்தின் உறுப்பினர் வைத்தியர் பிரசாந் கொலம்பகே தெரிவித்தார்

மாணவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துதல் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இருப்பினும் டெங்கு தொற்று நோயாளர்களுக்கான சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை நிலையம், சிறுவர் சிகிச்சை நிலையம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையம் மற்றம் அவசர சிகிச்சை பிரிவு என்பன தொடர்ச்சியாக சேவையில் இருக்கும் எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .