2021 மார்ச் 04, வியாழக்கிழமை

வைத்தியர்கள் ஏமாற்றம்

Yuganthini   / 2017 ஜூலை 20 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த சில நாட்களில் சில முக்கிய தீர்மானங்களை எடுக்கப்போவதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்தச் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே குறிப்பிடுகையில்,

மருத்துவக் கல்வியை தொடருவதற்கான  குறைந்தபட்ச தரத்தை வர்த்தமானியில் அறிவிக்காவிட்டால், இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதில் எந்ததொரு பயனும் இல்லை.

சைட்டம் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எந்ததொரு வாய்ப்பையும் எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை ​எனத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று (20) சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகையில், அரசாங்கம் மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்சத் தரத்தை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .