2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

கொழும்பில் இடம்பெறும் வீதி அபிவிருத்தி பணிகளில் சிறைக்கைதிகள்

Super User   / 2010 மே 23 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச விருது வழங்கும் விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் வீதி அபிவிருத்திப் பணிகளில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த கொழும்பு மாநகரசபையின் நிர்வாக அதிகாரி ஒமர் காமில், 60 வீதமான சிறைக்கைதிகள் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளை தாம் வழங்குவதாகவும் ஒமர் காமில் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக வீதி அபிவிருத்திப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ஆனாலும், திரைப்பட விழாவிற்கு முன்னதாக வீதி அபிவிருத்திப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுவிடுமெனவும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--