2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் ’சிறிகொத்தாவுக்கு அறிவிக்கவும்’

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதிகளில் இடம்பெற்று வரும் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான, சிறிகொத்தாவுக்கு அறிவிக்குமாறு, கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான, அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்துக்கு வாக்களித்த, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வன்முறைகளுக்கு இலக்காகி, அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதைத் தடுப்பதற்கான பொறுப்பு கட்சிக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, அவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பவர்கள் கட்சியின் தலைமையகத்தின் தொலைபேசி இலக்கமான 0112-2889378, 077-9215299 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .