2021 மே 18, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சிக்கிய இளைஞன் உடல் கருகிப் பலியானார்

Editorial   / 2018 மார்ச் 20 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, தம்பலகாமம், காளி பாஞ்சான் ‘சிவப்பு பாலம் ‘ எனுமிடத்தில் இடம்பெற்ற விபத்தில், இளைஞரொருவர் உடல்கருகிப் பலியானதுடன், மற்றொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுக்காலை 9:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதென, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.  

தம்பலகாமத்திலிருந்து கிண்ணியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர ரக வாகனமும், மூதூரியிலிருந்து தம்பலகாமம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளிலும் நேருக்கு நேர் மோதியதிலேயே, இவ்விபத்துச் சம்பவித்துள்ளது 

மூதூர் நெய்தல் நகரைச் சேர்ந்த தௌபீக்- ஹருனி (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

அவரது சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த பொலிஸார், காயமடைந்தவர், தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றனர்.  

டிப்பர் ரக வாகனம், மெட்டல் கற்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அந்த வாகனத்தில் மோட்டார் சைக்கிள் மோதுண்டு, 200 அடி தூரம் இழுத்துச் சென்றுள்ளது. அதன்போது, ​மோட்டார் சைக்கிளின் பெற்றோல், தாங்கி வெடித்துள்ளது.  

அதன்பின்னர், ​மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து டிப்பர் ரக வாகனமும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்போதே, அவ்விளைஞன் உடல்கருகி பலியாகியுள்ளா​ர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.   

(அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், தீஷான் அஹமட்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .