Editorial / 2017 ஜூன் 10 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான், எஸ்.என்.நிபோஜன்
நீர்கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் அம்பியூலன்ஸ் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இச்சம்பவம், இன்று (10) அதிகாலை 1.30 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் வீதியில் பால்தி சந்தியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி, கணேசபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய யோகரத்னம் ராஜேந்திரன் என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த அம்பியூலன்ஸ் வண்டி மீது எதிர் திசையில் வேகமாக வந்த கார் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.
சம்பவத்தை அடுத்து அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி படுகாயமடைந்து, வாகனத்திலிருந்து வெளியே விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த அம்பியூலன்ஸ் வண்டியில் மரணமடைந்த சாரதியும், நோயாளியும், அவருக்கு உதவியாக வந்த இருவரும் பயணித்துள்ளனர்.
விபத்துச் சம்பவத்தினால் அம்பியூலன்ஸ் வண்டியில் பயணித்த ஒருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்தின் காரணமாக இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.
காரின் சாரதியை ராகமை வைத்தியசாலையில் வைத்திய சோதனைக்கு உட்படுத்தியபோது அவர் மது போதையில் இருந்தமை தெரிய வந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .