2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு 138 வாக்குகளினால் அங்கீகரிப்பு

Super User   / 2010 ஜூலை 03 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்புக்கு 138 வாக்குகள் ஆதரவாகவும் 75 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாக்கெடுப்பில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை

இதேவேளை, இவ்வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழப்பம் விளைவித்தனர். இந்நடவடிக்கைக்கு எதிராக சபாநாயகர் சமல் ராஜபக்ஸ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

  Comments - 0

 • xlntgson Sunday, 04 July 2010 08:37 PM

  '78 யாப்பின் பின் பட்ஜெட்களுக்கு ஒரு முக்கியத்துவமும் இல்லை, வரியையும் சம்பளத்தையும் கூட்டவோ குறைக்கவோ பட்ஜெட் அவசியமில்லை. முன்தேதியிட்டோ பின்தேதியிட்டோ அதை கூட்டி குறைக்க ஜனாதிபதி உத்தரவு போதும் என்றாலும் பட்ஜெட் வாக்கெடுப்பின் போது அரசை தோற்கடிக்க முடியும் என்பதனால் தொங்கிய பாராளுமன்றங்களில் காரசாரமான விவாதங்கள் நடக்கும். அதுவும் இப்போது இல்லை. எதிர்கட்சிகள் இணைந்தும் எண்பது என்ற எண்ணிக்கை வரவில்லை.அடுத்த பட்ஜெட்டில் சம்பள உயர்வு என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கை உள்ளடக்கப்பட்டதே விசேடம். வேறில்லை.

  Reply : 0       0

  sheen Monday, 05 July 2010 09:09 PM

  சம்பளம் கூட்டாமலேயே பொருட்கள் விலை ஏறுகின்றன, இது எவ்வாறு நிகழ்கிறது? பணவீக்கம் குறைந்து விட்டதாககூட மத்திய வங்கி அறிக்கையிடுகிறது, அதுவும் எவ்வாறு என்று விளங்கவில்லை, பொருட்களின் விலை அதுவும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையாமல் பண வீக்கம் குறைந்துவிட்டது என்று ஒத்துக்கொள்ளமுடியுமா? எட்டிலிருந்து பதினெட்டு விழுக்காட்டு விலை ஏற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது இது யுத்த காலத்தின் நிலைமையே அன்றி வேறில்லை. 'புலி'யை விட 'புலி' நிழல் பயங்காட்டுகிறதோ, தெரியவில்லை!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--