2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு தற்காலிக பூட்டு

Editorial   / 2017 ஜூலை 16 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியால் வில்பத்து தேசிய சரணாலயத்தை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தற்காலிகமாக மூடிவிட இலங்கையின் வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்போது நிலவுகின்ற கடும் வரட்சி காரணமாக சரணாலயத்துக்குள் வாழும் வன விலங்குகளுக்குத் தேவையான நீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, வன விலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சரணாலயத்துக்குள் அமைந்துள்ள உல்லாச விடுதிகளில் தங்கியுள்ளோரை உடனடியாக வெளியேறுமாறு கோரியுள்ளதாக தெரிவித்துள்ள திணைக்களம், சரணாலயம் மீண்டும் திறக்கப்படும் நாள், பின்னர் அறிவிக்கப்படுமென்றும் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .