2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

வெளிநாடுகளில் புலிகள் சார் இணையங்கள் தொடர்ந்து இயங்குகின்றன - கோட்டாபய

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்ட போதிலும், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு சார்பான இணையதளங்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இன்று காலை படையினருக்கான இராணுவத் தலைமையகமொன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பிரிட்டிஷில் குளோபல் தமிழ் போரம், அமெரிக்காவில் நாடு கடந்த அரசாங்கம் நிறுவுவது, நோர்வேயில் இன்னமும் விடுதலைப் புலிகள் இருப்பதாகவும்  கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் முகமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் கடற்படையினர் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். 

இந்நிலையில், பொதுமக்களுடன் நல்லுறவைப் கட்டியெழுப்புவதற்கான  நடவடிக்கையில் தற்போது இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் அவர் கூறினார்.  Comments - 0

 • xlntgson Monday, 21 June 2010 09:10 PM

  இணையதளங்களில் அப்படி என்னதான் சொல்லிவிட முடியும், புதுமையாக இதுவரை சொல்லாதவற்றை? இந்திய ஒப்பந்தத்தை அவர்களும் எதிர்க்கின்றார்கள் கொடுத்ததை திருப்பி எடுத்துக்கொள்ளும் விதமாக இருக்கின்றது என்று, இவர்கள் கொடுத்துப்பார்க்கக் கூட பயப்படுகின்றார்கள். அது ஈழத்துக்கு படிக்கல் ஆகிவிடும் என்று. முட்டுக்கட்டை பொலீஸ்அதிகாரம் என்றால் மிகைஆகாது. வடக்கை கிழக்கை இணைக்க இந்தியா கோராது என்று உறுதியாக கூறலாம் இப்போதைக்கு! அனைத்து தமிழ்கட்சிகளும் இதில் ஒரேமாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும் கூட. முஸ்லிம்களிடம் இல்லை!

  Reply : 0       0

  ravi Tuesday, 22 June 2010 03:10 PM

  http://www.youtube.com/watch?v=wavuefMSWWc

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--