2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் 110 உத்தியோகத்தர்களுக்கு திடீர் இடமாற்றம்

Super User   / 2010 மே 16 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

EXCLUSIVE வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 110 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மட்டக்களப்பு மாவட்டத்துக்குள்ளேயே கடமையாற்றுவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த இடமாற்றம் தொடர்பில் தமிழ்மிரர் இணையத்தளம் பொலிஸ் பேச்சாளர்  பிரஷாந்த ஜயக்கொடியிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது ஒரு உள்ளக ரீதியான இடமாற்றமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி வெற்றி பெறுவதற்கு வாழைச்சேனை பொலிஸார்  சாதகமான முறையில்  செயற்படவில்லை  என்பதே இந்த இடமாற்றத்திற்கான பிரதான காரணம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் அமீர் அலியின்  தோல்விக்குக் காரணமாக செயற்பட்டதாகக் கருதப்படும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுமே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று வாழைச்சேனையிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் அமீர் அலி உடன் தமிழ்மிரர் இணையத்தளம் பலமுறை தொடர்பு கொள்ள முயறசித்த போதும் அது பலனளிக்கவில்லை.

இவ்வாறு குறிப்பிட்டதொரு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தவிர்ந்த, ஏனைய அனைத்து பொலிஸ் உத்தியோகர்த்தர்களும் இடமாற்றம் செய்யப்பட்டமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.(R.A)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--