2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வவுனியாவில் வீதியோர கட்டிடங்கள் உடைக்கப்படும்-சாள்ஸ்

Super User   / 2010 மே 28 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நகரில் வீதி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட திட்ட வரைவின்படி அகற்றப்பட வேண்டிய  கட்டிடங்கள் உடைக்கப்படும் என வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ்  தெரிவித்தார்.

அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின்படியே, வீதி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேற்படி கட்டிடங்களின் உரியவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் அனுமதி கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

வவுனியாவில் உள்ளூர் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கென 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
 

  Comments - 0

  • thanu Sunday, 30 May 2010 04:18 AM

    அத்து மீறி அமைக்கப் பட்ட கடைகளை விடுத்து நகர சபை கட்டடங்கள் வீதி அபிவிருத்திக்காக உடைக்கபட உள்ளன, இவை அனைத்தும் அமைச்சர் ஒருவரின் உத்தரவின் பேரில் நடைபெறுவதாக கேள்வி......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--