2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

விபசார விடுதி முற்றுகை: தாய்லாந்துப் பெண்கள் உட்பட 08 பேர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 29 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை, 42ஆவது ஒழுங்கையில் ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்னும் பெயரில் விபசார விடுதி நடத்திய எண்மரை, நேற்று திங்கட்கிழமை (28) இரவு 10.45க்கு கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாய்லாந்துப் பெண்கள் இருவர் உட்பட ஐந்து இலங்கைப் பெண்கள் மற்றும் குறித்த நிலையத்தின் முகாமையாளரான ஆணொருவரையுமே பொலிஸார் இவ்வாறு கைதுசெய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட இலங்கைப் பெண்கள் ஐவரும் கண்டி, வாரியபொல, பாதுக்க, நீர்கொழும்பு மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30, 24, 21, 25 வயதானவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X