2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட இந்திய மீனவர்கள் தீர்மானம்

George   / 2016 ஜூலை 20 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜூலை 22 ஆம் திகதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தமிழக மீனவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

இராமேசுவரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

'இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் தமிழக  மீனவர்கள் 77 பேரையும், 111 படகுகளையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 22முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது' என தீர்மானிக்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாக, ஜூலை 26ஆம் திகதி இராமேசுவரம் பஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜூலை 28ஆம் திகதி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது ஆகிய முடிவுகளையும் மீனவர்கள் எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .