2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியவெவ - மிரிஜ்ஜ​வில வீதி, ஹம்பாந்தோட்டை மேம்பாலத்துக்கு அருகில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் காயமடைந்துள்ளார்.  

இன்று காலை 8.30 மணியளவில், இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஹம்பாந்தோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .