2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

ஹெரோயின் வைத்திருந்தவர்களுக்கு மரண தண்டனை

Editorial   / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஷட்.ஷாஜஹான்)

ஹெரோயின் போதைபொருள் வைத்திருந்த இருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (28) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2.662 Kg  ஹெரோயின் போதைபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி  வத்தளை ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில்  கொழும்பு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்ப்பட்ட இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கண்டி வீதி, களனி பிரதேசத்தை சேர்ந்த செனரத் முதியன்சிலகே முனசிங்க என்ற ஆண் ஒருவருக்கும்,  வத்தளை ஹுனுப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா ஷாமிலா ஆப்தீன் என்ற பெண்ணொருவருக்குமே  நீர்கொழும்பு  மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரண ராஜ கடந்த மரணதண்டனை  விதித்து  தீர்ப்பளித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .