2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஹைட் மைதானத்துக்கு நானும் செல்வேன்: மஹிந்த

Menaka Mookandi   / 2016 மார்ச் 17 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டு எதிரணியினரால் கொழும்பு, இப்பன்வெல ஹைட் மைதானத்தில் இன்று நடத்தப்படவுள்ள கூட்டத்தில், தான் கலந்துகொள்ளப்போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளார்.

'பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாராதீர்கள். நான் ஹைட் மைதானத்துக்குச் செல்வேன்' என்று அவர் அந்த வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஹைட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .