2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

1,000 வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்து

Super User   / 2010 நவம்பர் 17 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக வீடுகளை அமைக்கும் இந்திய அரசாங்த்தின் திட்டத்தின்கீழ் 1,000 வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பை ஹிந்துஸ்தான் பிறீபப் லிமிட்டெட் நிறுவனம் ஏற்றுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தமொன்றில் இந்திய வெளிவிவகார அமைச்சின் சார்பில் அமைச்சின் இணைச் செயலாளர் ரி.எஸ்.திருமூர்த்தியும் ஹிந்துஸ்தான் பிறீபப் லிமிட்டெட் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் ஜெய்வீர் ஸ்ரீவஸ்தாவாவும் நேற்று புதுடில்லியில் கையெழுத்திட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்த அறிக்கையொன்றல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 ஜுன் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது, இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு இந்தியா முன்வந்தமை குறிப்பிடத்தக்கது. (KB)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--