2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

தாதியர்க்கு ஆங்கிலம் கற்பிக்க ரூ.100,000 அறவிட்ட கல்வி நிறுவனம் காணவில்லை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சந்துன் ஏ.ஜயசேகர)

அரசாங்க தாதியர்களுக்கு IELTS ஆங்கில பாடநெறியை கற்பிப்பதற்காக, சுகாதார அமைச்சினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் ஆங்கில கல்வி நிறுவனத்தை தேடும் முயற்சி பயனளிக்கவில்லை என சுகாதார அமைச்சின் பேச்சாளர் இன்று தெரிவித்தார்.

உயர் சம்பளத்துடனான வேலைக்காக இவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பும் நோக்கில் வழங்கப்பட்ட இந்த ஆங்கில கல்விக்கு வருடமொன்றுக்கு தலா 100,000 ரூபா அறவிடப்பட்டது.

2009 இல் சுகாதார அமைச்சு நேர்முக பரீட்சை மூலம் 125 தாதியரை தெரிவு செய்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்துக்கு வேலைக்கு அனுப்புவதற்காக இந்த IELTS அடிப்படை தகுதியாக இருந்தது.

இந்த IELTS பாடநெறிக்காக அமைச்சு அதிகாரிகள் நாரெஹென்பிட்டியில் ஒரு தனியர் நிறுவனத்தை தெரிந்தெருத்தனர். இதற்காக தாதியர் ஒருவரிடமிருந்து தலா 100,000 ரூபா கட்டணம் அறவிடப்பட்டது.

சில  மாதங்களின் பின் பாடநெறி இடைநிறுத்தப்பட்டதால் தாதியர்கள் செய்த முறைப்பாட்டின் பேரில் விசாரித்தபோது, நாரெஹென்பிட்டியில் இருந்த மேற்படி கல்வி நிறுவனம் மூடப்பட்டுவிட்டதும், அதன் உத்தியோகத்தர்கள் தலைமறைவாகிப்போனது தெரியவந்தது.

இதனால் ஒரு தாதியர் கூட அமெரிக்கா செல்ல முடியவில்லை. இப்போது தாதியரை வெளிநாட்டுக்கு அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இந்த ஊழலில் பங்கு இருப்பது விசாரணைகளின் மூலம் தெரிவந்துள்ளதாக  காட்டுவதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--