2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ராஜ் ராஜரட்னத்திற்கு 11 ஆண்டு சிறை; அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 13 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்க பங்குச் சந்தையில் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இலங்கையரான ராஜ் ராஜரட்னத்திற்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கெலோன் நிதி நிறுவனத்தின் ஸ்தாபகரான ராஜ் ராஜரட்னம்இ உள்ளகத் தகவல்களைப் பயன்படுத்தி 72 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்க வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பாரிய உட்சந்தை மோசடி இதுவெனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில்இ இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு அமெரிக்க மாவட்ட நீதவான் ரிச்சட் ஹொல்வெலினால் இன்று வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு 11 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 

இருபத்து நான்கரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அரச தரப்பு சட்டத்தரணிகள் கோரியிருந்த நிலையில்இ ராஜ் ராஜரட்னத்தின் நோய்களைக் காரணம் காட்டி தண்டனையை குறைக்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரியூள்ளனர். இதனையடுத்து அவருக்கான  தண்டனை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X