2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பொன்சேகாவின் மனு விசாரணை குறித்த தீர்மானம் 11ஆம் திகதி

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

அரசியலமைப்பின் 89 (D) உறுப்புரிமையின் படியும் இராணுவ சட்டத்தின் படியும் இராணுவ நீதிமன்றம் ஒரு நீதிமன்றமே என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில் இராணுவ நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்து தன்னை தொடர்ந்து நாடாளுமன்ற அங்கத்தவராக பிரகடனம் செய்யும் படி மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தாக்கல் செய்த ஆணைகோரும் மனுவை விசாரிப்பதா? இல்லையா? என பெப்ரவரி 11ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

மனுதாரரான சரத் பொன்சேகாவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரொமேஷ் டி.சில்வா இந்த மனுவில் இராணுவ நீதிமன்றம் ஒரு நீதிமன்றமா? என தீர்ப்பளிக்கும் படி கேட்டது ஒரு அம்சமே என்றும் இந்த மனுவில் வேறு விடயங்களும் அடங்கியிருப்பதால் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கேட்டுக்கொண்டவாறு மனுவை இரத்து செய்யக்கூடாது என வாதிட்டார்.

இந்நிலையில் இது பற்றிய தீர்ப்பை நீதிமன்றம் பெப்ரவரி 11ஆம் திகதி வரை ஒத்திவைத்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .