2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் 12 பஸ்கள் சேவையில்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 16 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 அதிசொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

இந்த பஸ்களில் 6 பஸ்கள் கொழும்பிற்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையிலும் ஏனைய 6 பஸ்கள் கொழும்பிற்கும் நீர்கொழும்பிற்கும் இடையிலும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அந்த சபை அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க- கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 27 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறக்கப்படவிருக்கின்ற நிலையில் எதிர்வரும் 21 சில பஸ்கள் இந்த அதிவேக நெடுஞ்சாலையில் பயிற்சியோட்;டத்தில் ஈடுபடுத்தப்படும் என்றும் அந்த சபை அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .