2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

13ஐ பலவீனப்படுத்த கூடாது: இந்தியா

Kogilavani   / 2013 ஜூலை 29 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

13 ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்தக் கூடாதென்பதில் இந்திய அரசாங்கம் உறுதியாக உள்ளதென இந்திய இராஜாங்க அமைச்சர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இலங்கை  தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குதல் மற்றும் நல்லிணக்கம் என்பவை தொடர்பாக மத்திய அரசாங்கத்தின் நிலையில் மாற்றம் இல்லையென தமிழ் நாடு அரசாங்கத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்துள்ளார்.

1987இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியான 13 ஆவது திருத்தம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதற்கென கொண்டுவரப்பட்டது.

தற்போது இலங்கை அரசாங்கம் இந்தியாவின் விருப்பத்துக்கு மாறாக அதை இரத்து செய்ய விரும்புகிறது.

சேது சமுத்திர திட்டம் 5,500 கோடி ரூபா செலவில் செயற்படுத்தப்படுமெனவும் இது தொடர்பாக மத்திய அரசாங்கம் உறுதியாக உள்ளதெனவும் அமைச்சர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X