2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சியாமினின் 13,020 சப்பாத்து ஜோடிகள் மீட்பு

Kanagaraj   / 2013 ஜூலை 24 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மொஹமட் சியாம் என்ற வர்த்தகருக்கு சொந்தமான வெளிநாட்டு சப்பாத்து ஜோடிகள் 13,020 கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.

ஒருகொடவத்தை சுங்கப்பிரிவில் வைத்தே இந்த சப்பாத்து ஜோடிகள் இன்று புதன்கிழமை கைப்பற்றப்பட்டதாக சுங்கப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த சப்பாத்து ஜோடிகள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் அறிவித்துள்ளனர்.

அந்த சப்பாத்து ஜோடிகளை இறக்குமதி செய்த கொழும்பு-14 லுள்ள பதிவுசெய்யப்பட்ட வர்த்தக நிறுவனத்தின் இறக்குமதியாளரிடம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது இந்த சப்பாத்துகளை இறக்குமதி செய்வதற்கான கட்டணத்தை சப்பாத்து வர்த்தகரான மொஹமட் சியாமே செலுத்தியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது என்றும் சுங்கப்பிரிவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--