2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஜப்பான் 132 மில்லியன் ரூபா உதவி

Super User   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

இலங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிக அவசர உதவிகளுக்காக சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக 132 மில்லியன் ரூபா வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க நிவாரணம் மற்றும் முதற்கட்ட பணிகளுக்காக உலக உணவு திட்டத்திற்கு 77 மில்லியன் ரூபாவும் யுனிசெப் ஊடாக சுத்தமான நீர் மற்றும் சுகாதார வசதிகளுக்காக 33 மில்லியன் ரூபாவும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைக்க 22 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவராலயம் வெளியிட்ட ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பானிய அரசு ஏற்கனவே 220 மில்லியன் ரூபா நிதி வழங்கியுள்ளதுடன் கூடாரங்கள் மற்றும் படுக்கை விரிப்புக்கள் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--