2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சட்டத்தரணிகள் சங்க தலைவர் விவகாரம்: ஜன.15 விசாரணை

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 20 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி உபுல் ஜயசூரியவை பின்தொடர்ந்தவர்களை இன்னும் இனங்காணவில்லை என்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர்; நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இந்த விவகாரம், கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரணைக்கு இன்று திங்கட்கிழமை எடுத்துகொள்ளப்பட்டபோதே குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கண்ட விடயத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

சந்தேக நபர்களை வீடியோ காட்சிகளின் ஊடாக இனங்காண்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அப்பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை பிரதான நீதவான், ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .