Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 03 , மு.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளிகளில் 150 இற்கு மேற்பட்டோர் இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுனந்த ரணசிங்க தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இவர்களில் 50 பேருக்கு மாதாந்தம் 2,500 ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவர்களுக்கான புலமைப்பரிசில் பணம் நன்கொடையாளர்களினால் மாதாந்தம் அவர்களின் வங்கி கணக்கிற்கு வைப்பு செய்யப்படுதாக பிரிகேடியர் சுனந்த ரணசிங்க தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பெறாத ஏனைய மாணவர்களுக்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தாங்கள் ஊக்குவிப்பதாக சுனந்த ரணசிங்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வைபவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் 106 உறவினர்களோடு இணைக்கப்பட்டனர்.
இவர்களில் மூன்று முன்னாள் பெண் போராளிகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago