2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

பாலியல் தொழிலில் 16 வயது சிறுமி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுகேகொடை பிரதேசத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 16 வயதான சிறுமியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன், பலவந்தமான முறையில் குறித்த தொழிலில் இச்சிறுமியை ஈடுபடுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொடை, பன்னிபிட்டிய பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சிறுமி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, அவரை குறித்த தொழிலில் ஈடுபடுத்தியதான குற்றச்சாட்டின் பேரில் ஹோமாகமை பகுதியிலிருந்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நுகேகொடை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் விசாரணைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார். (M.M)

 

 

 


  Comments - 0

 • jaaltharmini pathmanathan Tuesday, 10 August 2010 03:21 PM

  eppadippaddavarkal manitha thool poorththa vilankukal.......saddam sarijaana pathil kodukkuma ?

  Reply : 0       0

  xlntgson Monday, 09 August 2010 08:37 PM

  ஆச்சரியமில்லை,காதலனோடு வீட்டுக்கு தெரியாமல் ஓடி பின்னர் தகட்டுக்கத்தியால் வெட்டிக்கொண்டு கடத்தப்பட்டோம் என்று கூறும் போது!இவர்களுக்கும் இளமையில் நல்ல மதிப்பு இருக்கும் அப்புறம் தெருவில் நிற்க வேண்டியது தான். புகையிரத & பஸ் நிலையங்கள் என்று கடைசியில் வாடிக்கையாளர் இல்லாமல் பிச்சை எடுக்கவரும்.வேலைதேடி தருவதாக எமாற்றுகின்றவர்களையும் திடீர் என்று மூடப்படும் தொழில் நிறுவனங்களையும் சட்டென்று வேலையை விட்டு நிற்பாட்டி விடுகின்றவர்களையும் கூட கண்காணிப்பு குழு போட்டு பிடிக்கவேண்டும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--